spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமதுரவாயல் அருகே ஆளில்லாமல் ஓடிய குப்பை சேகரிப்பு வண்டி

மதுரவாயல் அருகே ஆளில்லாமல் ஓடிய குப்பை சேகரிப்பு வண்டி

-

- Advertisement -

மதுரவாயல் அருகே ஆளில்லாமல் ஓடிய குப்பை சேகரிப்பு வண்டி

சென்னை மதுரவாயல் ஆலபாக்கம் பகுதியில் மாநகராட்சி குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் ஆளில்லாமல் ஓடி சாலையில் நடந்து சென்றவர் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

we-r-hiring

மதுரவாயல் அருகே ஆளில்லாமல் ஓடிய குப்பை சேகரிப்பு வண்டி

சென்னை மாநகராட்சி உட்பட்ட பேட்டரி வாகனம் விபத்தில் சிக்கியிருக்கிறது. இன்று காலை வழக்கம் போல மாநகராட்சி ஊழியர் குப்பை குப்பை சேகரிப்பதற்காக மாநகராட்சியிலிருந்து வாகனத்தை எடுத்து வந்திருக்கிறார்.

அப்போது மதுரவாயலில் சாலை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு அவர் இறங்கி இருக்கிறார். சிறிது நேரத்தில் அந்த வாகனம் ஓட்டுனர் இன்றி சாலையில் ஓடி இருக்கிறது.

வேகமாக சென்ற இந்த வாகனம் அங்கு நடந்து சென்ற ஆறுமுகம் என்பவர் மீது மோதியது. அதனைத் தொடர்ந்து சாலையில் வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீதும் மோதி இருக்கிறது.

மதுரவாயல் அருகே ஆளில்லாமல் ஓடிய குப்பை சேகரிப்பு வண்டி

இதனால் அடுத்தடுத்து மூன்று பேர் மீது மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆறுமுகத்திற்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அதேபோன்று இரண்டு இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

இதுகுறித்து ஆறுமுகம் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது போன்ற மாநகராட்சி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் கவன குறைவாக செயல்பட்டவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த சம்பவத்தால் அந்த சாலையில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

MUST READ