spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலின சமத்துவம் கற்றுக்கொடுக்கப்படுகிறது – மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலின சமத்துவம் கற்றுக்கொடுக்கப்படுகிறது – மேயர் பிரியா

-

- Advertisement -

மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். இதுவரை பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் வரவில்லை எனவும் மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளாா்.சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலின சமத்துவம் கற்றுக்கொடுக்கப்படுகிறது – மேயர் பிரியா

சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட  பேருந்து சாலைகளில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை நீர் தெளித்து சுத்தம் செய்யும் சிறப்பு பணிக்காக  30 வாகனங்களை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மாநகராட்சி, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர்.

we-r-hiring

நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 925 பேருந்து நிழற்குடைகள்,  பேருந்து நிறுத்த பாதைகளில் தூய்மைப்படுத்தும் பணிகளுக்காக   30 உயர் அழுத்தம் இருக்கக்கூடிய வாகனங்கள்  இன்று துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வாகனங்களிலும் ஆயிரம் லிட்டர் தண்ணீர் பொருத்தப்பட்டு உயர் அழுத்தம் இருக்கக்கூடிய பைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. தற்போது வாடகை வாகனங்கள் மூலம் மண்டலத்திற்கு இரண்டு வாகனங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கழிப்பிடத்தை சுத்தப்படுத்துவதில் நான்காயிரம் கோடி முறைகேடு ஏதும் நடைபெறவில்லை. சென்னை மாநகராட்சி சார்பாக பராமரிக்கப்பட்ட வந்த கழிப்பிடங்களில் சில பகுதிகள்  தனியாரிடம் கொடுத்து பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு முதல் சில பகுதிகள் தொடர்ந்து சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கழிப்பிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு  புதுப்பிக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகிறது. இதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 419 பள்ளிகளில் மாணவர்களுக்கு தொடர்ந்து பாலின சமத்துவம் குறித்து கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூட  சென்னை மாநகராட்சி சார்பாக ஒவ்வொரு மாணவர்களுக்கும்  “ஜெண்டர் அண்ட் பாலிசி லேப்” துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஆறு ஏழு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு  குட் டச் பேட் டச்  கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பள்ளிகளில் இருந்து இதுவரை பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் வரவில்லை வந்தால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளுக்கு அருகிலேயே பெட்டிக்கடைகள் அமைந்திருப்பது குறித்த கேள்விக்கு,  பள்ளி கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட மீட்டர் அருகில் பெட்டி கடைகள் அமைக்க மாநகராட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என்றார்.

சென்னை பல்கலைகழகத்தில் மதம் தொடர்பான கருத்தரங்கம் – ரத்து செய்த நிர்வாகம்

MUST READ