- Advertisement -
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம். சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதும் இல்லை.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.400 குறைந்து ரூ.70,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.50 குறைந்து ரூ.8,805-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி இன்றும் சில்லறை விற்பனையில் 1 கிராம் வெள்ளி ரூ.109-க்கும் 1 கிலோ வெள்ளி ரூ.1,09,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை நேற்று இரண்டு முறை அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது நகைபிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.