spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்…சாமானிய மக்கள் அதிர்ச்சி…

ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்…சாமானிய மக்கள் அதிர்ச்சி…

-

- Advertisement -

தங்கம் இன்று காலை சவரனுக்கு ரூ.640 கூடிய நிலையில், தற்போது 2வது முறையாக ரூ.640 கூடியுள்ளது.ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்…சாமானிய மக்கள் அதிர்ச்சி…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, சவரனுக்கு மொத்தமாக ரூ.1,280 உயர்ந்துள்ளது. வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றம் நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில், மாலை மீண்டும் ரூ.640 உயர்ந்து, ஒரே நாளில் இரண்டாவது முறையாக விலை உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,02,080 ஆகவும், ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12,760 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. காலை நேரத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.12,680-க்கும், ஒரு சவரன் ரூ.1,01,440-க்கும் விற்பனையானது.

தங்கத்துடன் சேர்ந்து வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது காலையில் கிராமிற்கு ரூ.8 உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.265 விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது கிராமிற்கு ரூ.1 உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.266க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதன் காரணமாக ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.2,66,000 விற்பனை செய்யப்படுகிறது.

புத்தாண்டு நாளில் சிறிய சரிவைக் கண்ட தங்கத்தின் விலை, அதன்பின்னர் தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. உலக சந்தை நிலவரம், முதலீட்டு போக்கு மற்றும் நாணய மாற்றங்கள் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வரும் நாட்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தாறுமாறாக உயர வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தான்குளம் வழக்கு… காவல் ஆய்வாளர் மருத்துவ சிகிச்சைகளைப் வெளியில் பெற உச்சநீதிமன்றம் அனுமதி!!

MUST READ