தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், இதுவரை 300 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படவில்லை என்று சென்னை காவல் துறை தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. சென்னை காவல்துறைக்குட்பட்டு 24 தொகுதிகள் உள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். மொத்தமாக 2375 உரிமம்பெற்ற துப்பாக்கிகள் உள்ள நிலையில், இதுவரை 1490 உரிமம்பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 300 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படவில்லை.

இதில் விளையாட்டிற்காகவும், வங்கி பாதுகாப்பிற்காகவும் வைத்துள்ள 527 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள சென்னை காவல்துறை தகவல் அளித்துள்ளது.
