spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஅண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் விசாரணை - சிறப்பு புலனாய்வு குழு

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் விசாரணை – சிறப்பு புலனாய்வு குழு

-

- Advertisement -

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு பெண் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் விசாரணை - சிறப்பு புலனாய்வு குழு

we-r-hiring

கடந்த 23-ஆம் தேதி இரவு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்த உயர்நீதிமன்ற உத்தரவுபடி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

இந்த சிறப்பு புலனாய்வு குழுவிடம் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு ஆவணங்களை ஒப்படைத்த நிலையில்,  3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான விசாரணை குழு  இன்று சம்பவம் நடந்த அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.

(சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சிநேக பிரியா, ஆவடி துணை ஆணையர் ஜமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்)

கடந்த வாரம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தச் சென்றபோது சிறப்பு புலனாய்வு குழுவும் உடன் சென்றதாக கூறப்படும் நிலையில்,  குற்ற நிகழ்வு இடத்திற்கு இன்று காலை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளும் தங்களது குழுவினருடன் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவி வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய குழ விசாரணை!

MUST READ