தாம்பரம் மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய ஜூனியர் இன்ஜினியர் யுவராஜ் ரெயில் முன்பாக பாய்ந்து உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அருகிலுள்ள காட்டாங்குளத்தூர் ரெயில் நிலையத்தில் சோழன் விரைவு ரெயில் முன்பாக பாய்ந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து தாம்பரம் இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் வெளிவந்த தகவலின்படி, யுவராஜ் 12.08.2025 முதல் கடுமையான கழுத்து வலி காரணமாக மருத்துவ சான்றிதழ்களுடன் விடுப்பு கேட்டுள்ளாா். ஆனால், மேலதிகாரிகள் விடுப்பை வழங்க மறுத்ததுடன், அவர் பணிக்கு வரவில்லை என ஆப்சண்ட் பதிவிட்டு மேல்நடவடிக்கை எடுத்ததாக தெரியவந்துள்ளது.
இதன் விளைவாக, வேலை நிறுத்தம் மற்றும் சம்பளத் தடை ஏற்பட்டு, யுவராஜ் கடுமையான மன உளைச்சலில் தவித்துள்ளாா். இதன் விளைவாக யுவராஜ் தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி-க்கு மெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளாா். அதில், தன்னிடம் நடந்த அநீதிக்கு மேலதிகாரிகளான சொர்ணலதா மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர்களையே நேரடியாக தனது தற்கொலையின் முடிவுக்குக் காரணம் என குறிப்பிட்டுள்ளாா்.

இந்த மெயிலை அனுப்பிய மறுநாளே, அவர் சோழன் விரைவு ரெயில் முன்பாக பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தற்கொலைக்குப் பின்னணியில் உள்ள காரணங்கள், யுவராஜ் அளித்த மெயிலில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சூர்யா ரசிகர்களுக்காக காத்திருக்கும் அடுத்தடுத்த இன்ப அதிர்ச்சிகள்!


