spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு…

சென்னையில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு…

-

- Advertisement -

சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னையில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு…சென்னையில் தொழிலதிபர்களின் வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில்  21 வாகனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று சோதனை மேற்க்கொண்டு வருகின்றனா் என தகவல் வெளி வந்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கீழ்பாக்கத்தில் இரும்பு வியாபாரம் செய்யும் நிர்மல்குமார் என்பவரது வீட்டிலும், சென்னை கீழ்பாக்கத்தில்  அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சைதன்யா என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டை ஸ்ரீநகர் பகுதியில் தொழிலதிபர் கலைச்செல்வன் வீட்டில், சென்னை கே.கே.நகரில் தங்க வியாபாரி சேட் என்பவர் வீட்டில், சென்னை அம்பத்தூரில் வழக்கறிஞர் பிரகாஷ் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

தனுஷுக்கு எதிராக பரவும் செய்திகள்…. பிரபல சீரியல் நடிகை விளக்கம்!

we-r-hiring

MUST READ