Homeசெய்திகள்சென்னைசாலை விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்

சாலை விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்

-

- Advertisement -

தீபாவளி பண்டிகை கொண்டாடி விட்டு வீடு திரும்பிய போது சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்.

சாலை விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்

மதுரவாயலில் லாரி சக்கரத்தில் இரு சக்கர வாகனம் சிக்கிய விபத்தில்  இளைஞர் உயிர் தப்பிய நிகழ்வு.

சென்னை வடபழனியில் வசித்து வருபவர் சிதம்பரம் (34). இவர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தனது சொந்த ஊரான திருவண்ணாமலை செய்யாறு சென்று இன்று காலை மீண்டும் சென்னை திரும்பினார். பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடு செல்லும் சாலையில் மதுரவாயில் பாலத்தின் கீழே அவர் சென்றபோது, முன்னே சென்ற லாரியை முந்தும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் சிதம்பரம் இருசக்கர வாகனத்தின் கண்ணாடி லாரியில் சிக்கிக்கொண்டது. இதனால் இருசக்கர வாகனம் பின் சக்கரத்தின் கீழே இழுக்கப்படுவதை உணர்ந்த அவர் உடனே தாவி குதித்து உயிர் தப்பி உள்ளார். இருப்பினும் லாரியின் சக்கரத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் 20 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டு கடும் சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீசார் லாரி டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

லாரி சக்கரத்தில் சிக்கி இருசக்கர வாகனம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

விபத்தில் 2 பெண் போலீசார் பலி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு, ஆவடி காவல் ஆணையர் மறுப்பு

MUST READ