வெள்ளியின் விலை தங்கத்தின் விலையை விட பல மடங்கு குறைவாக தான் இருக்கிறது. ஆனால் வரும் நாட்களில் இதன் மதிப்பு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கு நவீன தொழில்நுட்பத்தில் வெள்ளியின் தேவை அதிகரித்திருப்பதே காரணம் என கூறப்படுகிறது.
தொழிற்துறை தேவை அதிகரிப்பு, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை, சீனாவின் பணக்கொள்கை, உள்ளிட்ட காரணங்களால், சர்வதேச சந்தையில் வெள்ளி விலை, மேலும் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.102க்கும் ஒரு கிலோ ரூ. 102,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
22காரட் தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி இன்று ஒரு கிராம் 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7100க்கும் ஒரு சவரன் ரூ.56,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலையிலும் எவ்வித மாற்றமும் இன்றி இன்று 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.5870க்கும் ஒரு சவரன் ரூ. 46,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.