(செப்டம்பர் 15) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்நது உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.10 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.10,210-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வணிகத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் வெள்ளி ரூ.143-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,43,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய சந்தை நிலவரத்தில், தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று விலை மாற்றமில்லாமல் இருந்தது. இன்றைய விலை சரிவு, நகை வாங்குபவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தாலும், இது ஒரு தொடர்ச்சியான போக்காக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனவே, தங்கம் வாங்கத் திட்டமிடுபவர்கள் சந்தை நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து, நிபுணர்களின் அலோசனையைப் பெற்று, சரியான நேரத்தில் முடிவெடுப்பது புத்திசாலித்தனம்.
மன்னிப்பு கேட்ட விஜய்! பேச பேச சம்பவம் செய்த தொண்டர்கள்! மகிழ்நன் நேர்காணல்!
