Homeசெய்திகள்சென்னைதெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் - மேயர் பிரியா

தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் – மேயர் பிரியா

-

- Advertisement -

சென்னையில் தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு, இரண்டு மாதத்திற்குள் முடிக்கப்படும். சாலையில் தேவையில்லாமல் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்து அடைத்து வைக்க புதிய மாட்டுத்தொழுவம் மாநகராட்சியால் உருவாக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் - மேயர் பிரியா

சென்னை மயிலாப்பூரில் தெரு நாய் கடித்து காயமடைந்த சிறுவன் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுவனை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரில் சந்தித்து நலம் விசாரித்து பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, சென்னையில் கடைசியாக 2018 ஆம் ஆண்டு தெரு நாய்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

எனவே நடப்பாண்டு மீண்டும் தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு, இரண்டு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றார். சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதுடன் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் - மேயர் பிரியா

வரும் நிதி ஆண்டில் சாலையில் தேவையில்லாமல் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்து மாநகராட்சி சார்பில் அடைத்து வைக்க புதிய மாட்டுத்தொழுவம் உருவாக்கப்படும் என்றார். இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி வரும் நாட்களில் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நடிகர் தர்ஷன் மிகவும் மோசமானவர்… கன்னட நடிகை ரம்யா குற்றச்சாட்டு… (apcnewstamil.com)

மேலும் வளர்ப்பு நாய் பதிவு செய்ய மாநகராட்சி அறிவுறுத்தியதினால், இதுவரை இல்லாத வகையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் உரிமம் பெற்றுள்ளனர் என மேயர் பிரியா தெரிவித்தார். நடப்பாண்டில் சாலையில் சுற்றித்திரிந்த 1117 மாடுகள் பிடிக்கப்பட்டு 43 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ