நடிகர் தர்ஷன் மிகவும் மோசமானவர்… கன்னட நடிகை ரம்யா குற்றச்சாட்டு…
- Advertisement -
அண்மையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் தர்ஷன் மிகவும் மோசமானவர் என்று பிரபல கன்னட நடிகை ரம்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார்.
நடிகையும், அரசியல்வாதியுமானவர் திவ்யா ஸ்பந்தனா. கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருடன் இணைந்து 2003ம் ஆண்டு அபி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். தமிழில் சிம்பு நடித்த குத்து திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி, என பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
மாண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.பியான திவ்யா, கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவின் பேத்தியாவார். இந்நிலையில், பிரபல கன்னட நடிகர் தர்ஷன் மிகவும் மோசமானவர் என்றும், அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் நடிகை திவ்யா தெரிவித்துள்ளார். தர்ஷன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர், ரவுடிகளை ரசிகர்களாக கொண்டிருப்பவர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். நடிகர் ரேணுகாசாமியை சித்ரவதை செய்து கொலை செய்த வழக்கில், கன்னட நடிகர் தர்ஷன் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது