spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசாம்சங் நிறுவனத்தில் ஸ்டிரைக் - தொழிற்சங்கம் மீது வழக்கு பதிவு!

சாம்சங் நிறுவனத்தில் ஸ்டிரைக் – தொழிற்சங்கம் மீது வழக்கு பதிவு!

-

- Advertisement -

சாம்சங் நிறுவனத்தில், 11 நாட்களாக, தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடந்து வந்த நிலையில், CIDU சங்கம் மீது அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

சாம்சங் நிறுவனத்தில் ஸ்டிரைக் - தொழிற்சங்கம் மீது வழக்கு பதிவு!மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம், தன் உற்பத்தி வளாகத்தை சென்னை அருகே கொண்டுள்ளது.

we-r-hiring

இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த 11 நாட்களாக கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் சாம்சங் நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தொழிற்சங்க நடவடிக்கைகள் முலம் தொழிற்சாலையின் செயல்பாடுகளை சீர்குலைக்கின்றனர். மற்ற ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுக்கின்றனர்.

இவ்வாறு செய்வது தொழிற்சாலையின் சுமூகமான செயல்பாடு மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும்,’ என்று சாம்சங் தெரிவித்துள்ளது. இது குறித்து சிஐடியு சங்கத்தினர் கூறுகையில், தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள், சாம்சங்கின் புகார்களை நாங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றனர்.

இதனிடையே, எல்லாப் பிரச்சினைகளையும் விரைவில் தீர்க்க, ஆலையில் உள்ள தொழிலாளர்களுடன் பேச்சு தொடங்கி உள்ளதாகவும், சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

MUST READ