spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தக்கட்டணம் திடீர் உயர்வு... பயணிகள் அதிர்ச்சி!

சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தக்கட்டணம் திடீர் உயர்வு… பயணிகள் அதிர்ச்சி!

-

- Advertisement -

சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தக்கட்டணம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை விமான நிலையம்

we-r-hiring

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மல்டி லெவல் அடுக்குமாடி கார் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்தது. அப்போது ஏற்கனவே இருந்த பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்தனர். அந்தக் கட்டண உயர்வு அதிகம் என்றும், வாகனங்களை மல்டிலெவல் கார் பார்க்கிங்கில் கொண்டு போய் நிறுத்தி, மீண்டும் வெளியே எடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு வந்தன.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம், 2 ஆண்டுகளுக்குப் பின்பு, இன்று முதல் மீண்டும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 80 ஆக இருந்தது, தற்போது ரூ.85 ஆக அதிகரித்துள்ளது. கார்களுக்கு அதிகபட்சம் 24 மணி நேரத்திற்கு,ரூ. 525 ஆக இருந்தது, தற்போது ரூ.550 ஆக உயர்ந்துள்ளது. டெம்போ வேன்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.315 ஆக இருந்தது, தற்போது ரூ.330ஆக கூடியுள்ளது. 24 மணி நேரத்திற்கு கட்டணம் ரூ.1,050 ஆக இருந்தது, தற்போது ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல், பஸ், லாரிகளுக்கான குறைந்தபட்ச கட்டணம், ரூ.630 ஆக இருந்தது, தற்போது ரூ.660 ஆகவும்,  24 மணி நேரத்திற்கான கட்டணம் ரூ.2,100 ஆக இருந்தது, தற்போது ரூ.2,205 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேவேளையில், இருசக்கர வாகனங்களுக்கு  30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை கட்டண உயர்வு இல்லாமல், பழைய கட்டணமான ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை ஏற்கனவே பழைய கட்டணம் ரூ.30 ஆக இருந்த நிலையில், தற்போது புதிய கட்டணம் ஆக ரூ.35 நிர்யணியக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கான பழைய கட்டணம் ரூ.95 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கான வாகனங்கள், பிக்கப் பாயிண்ட், கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங் 2-வது தளத்திற்கு மாற்றப்பட்டபோதும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால்  விமான பயணிகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, தொடர்ந்து கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது எந்தவித முன்னறிவிப்பு இன்றி பார்க்கிங கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

MUST READ