spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஆந்திராவில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் தமிழக மாணவியர் அணியினர் தங்கப்பதக்கம் - அன்பில் மகேஸ்...

ஆந்திராவில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் தமிழக மாணவியர் அணியினர் தங்கப்பதக்கம் – அன்பில் மகேஸ் வாழ்த்து

-

- Advertisement -

ஆந்திரா மாநிலத்தில் விஜயவாடாவில் ஜனவரி 5 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு மாணவியர் அணி தங்கப்பதக்கம் வென்றனர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

ஆந்திராவில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் தமிழக மாணவியர் அணியினர் தங்கப்பதக்கம் - அன்பில் மகேஸ் வாழ்த்துஇந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்திய தேசிய அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான 68-வது கையுந்து பந்து விளையாட்டுப் போட்டி ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் ஜனவரி 5 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது.

we-r-hiring

இப்போட்டியில் பங்கேற்ற தமிழ்நாடு மாணவியர் அணியினர் இறுதிப் போட்டியில் கர்நாடக மாநில அணியினைரை வென்று தங்கப்பதக்கம் பெற்றனர். அவர்கள் இன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

MUST READ