சென்னை வள்ளுவா் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னா் திருவள்ளுவா் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளையும் வழங்கினாா்.
சென்னை வள்ளுவா் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடா்ந்து, 2026 ஆம் ஆண்டுக்கான அண்ணா விருதை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தாா்.
மேலும், மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு 2026 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது, வழக்கறிஞர் அருள்மொழிக்கு தந்தை பொியாா் விருது, விசிக பொதுச் செயலாளா் சிந்தனை செல்வனுக்கு அம்பேத்கா் விருது, எஸ்.எம். இதயத்துல்லாவுக்கு காமராஜா் விருது, நெல்லை ஜெயந்தாவுக்கு மகாகவி பாரதியாா் விருது, கவிஞரும் திரைப்பட பாடலசிாியருமான யுகபாரதிக்கு பாவேந்தா் பாரதிதாசன் விருது, முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்புக்கு தமிழ்தென்றல் திரு.வி.க விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தாா்.

இறையன்பு தனது பரிசுத் தொகையை முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு வழங்கினாா். கி.ஆ.பெ. விசுவநாதன் விருதை சு.செல்லப்பாவுக்கு வழங்கி கவுரவித்தாா் முதல்வா். விருதாளா்கள் ஒருவருக்கும் 1 சவரன் தங்கப்பதக்கமும், 5 லட்சம் ரொக்கப்பணமும், தகுதியுரையும் வழங்கப்பட்டது.
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – தயக்கத்துடன் ஏற்றுக் கொள்ளும் கலை – ரயன் ஹாலிடே


