மீண்டும் எறுமுகத்தில் தங்கம், கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் ஆபரணத்தங்த்தின் விலை சவரனுக்கு ரூ.2160 ஊயர்வு! மீண்டும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 9 ஆயிரத்தை தாண்டியது!தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று காலையில் சவரனுக்கு ரூ.160 உயர்நது ரூ.70200 க்கு விற்பனையான தங்கம் மாலையில் சவரனுக்கு ரூ.1000 உயர்ந்து 71,200க்கு விற்பனையானது. இன்று விற்பனையாகும் ஆபரணத்தங்கம் ஓரு கிராம் ரூ. 9025க்கும், ஒரு சவரன் ரூ.72,200 க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்துள்ளது.
வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்ட செல்வதால் மக்கள் வெள்ளியை வாங்க ஆர்வம் காட்டினார். ஆனால், தற்போது தங்கத்திற்கு இணையாக வெள்ளியின் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தங்கம் விலை சவரனுக்கு (நேற்றும், இன்றும்) ரூ. 2160 அதிகரித்த நிலையில், வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.111 விற்பனையாகிறது.
- Advertisement -