Homeசெய்திகள்சென்னைமுழு பூசணிக்காயைக் சோற்றில் மறைக்கும் சபாநாயகர்…… பெ.சண்முகம் பேச்சு

முழு பூசணிக்காயைக் சோற்றில் மறைக்கும் சபாநாயகர்…… பெ.சண்முகம் பேச்சு

-

- Advertisement -

சாதிய வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய மோதல் சம்மந்தமாக அமைக்கப்பட்ட நீதி அரசர் சந்துரு அளித்த பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்  அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளாா்.முழு பூசணிக்காயைக் சோற்றில் மறைக்கும் சபாநாயகர்…… பெ.சண்முகம்  பேச்சுசென்னை பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோயில், மடம், அறக்கட்டளை, வக்ஃபோர்ட், இனாம் நிலங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்பவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் மற்றும் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது, ”தமிழ்நாடு முழுவதும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் பல குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். பல லட்சம் விவசாயிகள் கோவில் நிலங்களில் சாகுபடி செய்து வருகிறார்கள். இதில் புதிய புதிய விதிமுறைகளை கொண்டுவந்து விவசாயிகள் மற்றும் குடியிருக்க கூடிய மக்களையும் வெளியேற்றும் நடவடிக்கையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய அணுகுமுறையை கைவிட்டு கோவில் மனைகளில் குடியிருக்கும் மக்களுக்கே அந்த இடத்தை சொந்தமாக்க வேண்டும். எனவே தவணை முறையில் அவர்களிடம் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த கோரிகைகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து திருநெல்வேலியில் சாதிய வன்முறைகளும் சாதிய ஆணவ கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை சாதிய மோதல்கள் நடப்பதில்லை என்று  முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்  அவரது பதில் ஏற்புடையது அல்ல.

ஏற்கெனவே சாதிய தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர் போகும் நிலையில், மீண்டும் உடல் நலம் பெற்று தற்போது கல்லூரியில் பயின்று வரும் மாணவர் சின்னதுரை மீண்டும் சாதிய தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார் நேற்று முன்தினம் பள்ளியிலே மாணவர்களிடையே சாதிய மோதல் நடைபெற்றிருக்கிறது.

பள்ளிகளில் நடக்கும் சாதிய மோதல் சம்மந்தமாக அமைக்கப்பட்ட நீதி அரசர் சந்துரு அளித்த பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களில் நடைபெறும் சாதிய மோதல்களுக்கு நிரந்தர முடிவு கட்ட வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.

சாதிய வன்முறைகளை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க கூடாது. சாதி வெறியர்கள் சாதி ஆணவம் கொண்டவர்கள் இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். சாதிய வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தனியாரிடமிருந்து பஸ்களை வாடகைக்கு பெற்று இயக்க போக்குவரத்து துறை முடிவு!

 

MUST READ