spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைடிட்டோ-ஜாக் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

டிட்டோ-ஜாக் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு – அன்பில் மகேஷ் பொய்யாமொழி

-

- Advertisement -

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை ( டிட்டோ-ஜாக் ) அறிவித்த கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

டிட்டோ-ஜாக் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - அன்பில் மகேஷ் பொய்யாமொழிசென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சங்கப் பிரதிநிதிகள் உடன் இன்று காலை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

we-r-hiring

டிட்டோ-ஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிதி சார்ந்த கோரிக்கைகள் பணி சார்ந்த கோரிக்கைகள் என 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தபோவதாக அறிவிப்பு செய்திருந்தனர்.

டிட்டோ-ஜாக் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - அன்பில் மகேஷ் பொய்யாமொழிஇந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் 12 பேருடன் சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிட்டோ-ஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர் காமராஜ்.

டிட்டோ -ஜாக் இரண்டு நாள் கோட்டை முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தோம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எங்களை அழைத்து பேசினார். எங்களுடைய 31 அம்ச கோரிக்கைகளை இரண்டு வகைகளாக பிரித்து அமைச்சருடன் பேசினோம் நிதி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பணி சார்ந்த பிரச்சினைகள் என கோரிக்கை வைத்தோம்.

பணி சார்ந்த பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் செய்து தருவதாகவும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்வதற்கு இதுவரை அழைத்து பேசாத சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அமைச்சர் உறுதி அளித்தார்.

நிதி சார்ந்த பிரச்சினைகளுக்கு தமிழக அரசின் நிதிநிலை குறித்து அமைச்சர் எடுத்துரைத்தார். மேலும் தமிழக அரசு நிதி நிலைமை குறித்து ஆசிரியர் சங்கங்களுக்கும் புரிகிறது. எனவே தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய பள்ளிக் கல்வித் துறை நிதியை பெற்றபின் எங்களது நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதி அளித்தார்.மேலும் தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து நிதி குறித்து பேச இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டு காட்டியதாக  தெரிவித்தார்.

தமிழ்நாட்டு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு  கொடுக்காததை எங்கள் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. நாங்கள் போராட்டம் அறிவிக்கும் போதெல்லாம் அரசு எங்களை அழைத்து பேசுகிறது. அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் போராட்டம் அறிவிக்கும் பொழுது அந்த அரசு அழைத்துப் பேசவில்லை. இந்த முறை அரசு மீது நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்…

MUST READ