சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் காவலரால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வரவேற்பு அளிக்கப்படும் தரைதளத்தில் பணியில் இருந்த மீனா என்கிற பெண் காவலர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் லோ பிபி காரணமாக மயக்கம் அடைந்து கீழே விழுந்துவிட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினாா். பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் பெண் காவலர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு பணி நிறைவு, 1982 தொல்பொருட்கள் கண்டெடுப்பு
