spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'டூரிஸ்ட் ஃபேமிலி' குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய படம்..... முதல் விமர்சனம் கொடுத்த பிரபலம்!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய படம்….. முதல் விமர்சனம் கொடுத்த பிரபலம்!

-

- Advertisement -

டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது.'டூரிஸ்ட் ஃபேமிலி' குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய படம்..... முதல் விமர்சனம் கொடுத்த பிரபலம்!

சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அரவிந்த் விஸ்வநாதன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு குடும்பம், பல சவால்களை எதிர்கொண்டு தங்களின் வலிகளை மறைத்து எப்படி சந்தோசமாக வாழ்கின்றனர் என்பதை கலகலப்பாக கூறியிருக்கும் திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இப்படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி விடுகிறது. இந்நிலையில் லைக்கா நிறுவனத்தின் நிறுவனர் GKM தமிழ் குமரன் டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து தனது முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.'டூரிஸ்ட் ஃபேமிலி' குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய படம்..... முதல் விமர்சனம் கொடுத்த பிரபலம்! அதன்படி அவர், “டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்தேன். இந்த படம் என்னை மிகவும் ஈர்த்துள்ளது. மனதையும் உருக்கியுள்ளது. சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ஆகியோரின் நடிப்பு புதுமையாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக முள்ளி தாஸ் (கமலேஷ்) என்ற கதாபாத்திரம் பாராட்டத்தக்க வகையில் அமைந்திருக்கிறது. தனது முதல் படத்திலேயே அற்புதமான கதை மற்றும் நகைச்சுவையை வழங்கிய இயக்குனர் அபிஷன், யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் இந்த அருமையான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி.என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் கண்டிப்பாக குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய படம்” என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

we-r-hiring

இதற்கிடையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இப்படம் போட்டு காட்டப்பட்டிருக்கிறது. அவர்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ