பிரபல நடிகை மாலினி ஃபொன்சேகா காலமானார்.
கடந்த 1978 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பைலட் பிரேம்நாத் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மாலினி ஃபொன்சேகா. இவர் தமிழ் மட்டுமில்லாமல் சிங்களம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து பெயர் பெற்றார். அந்த வகையில் இவர் கிட்டதட்ட 150 க்கு மேலான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் இலங்கை சினிமாவின் ராணி என்று பலராலும் பாராட்டப்பட்டவர். சினிமாவை தவிர சில காலம் அரசியலிலும் ஆர்வம் காட்டிய மாலினி ஃபொன்சேகா அந்நாட்டின் எம்பி ஆகவும் இருந்தார். இந்நிலையில் இவர் உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலம் இன்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். மாலினி ஃபொன்சேகா உயிரிழக்கும் போது அவருடைய வயது 78 என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.