spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபல நகைச்சுவை நடிகை உயிரிழப்பு.... சோகத்தில் திரையுலகம்!

பிரபல நகைச்சுவை நடிகை உயிரிழப்பு…. சோகத்தில் திரையுலகம்!

-

- Advertisement -

பிரபல நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் உயிரிழந்துள்ளார்.பிரபல நகைச்சுவை நடிகை உயிரிழப்பு.... சோகத்தில் திரையுலகம்!

1980, 90 காலகட்டத்தில் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். அந்த வகையில் கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமானார் பிந்து கோஷ். அதைத்தொடர்ந்து இவர் வடிவேலு, செந்தில், கவுண்டமணி ஆகியோருடன் இணைந்து நடித்து காமெடியில் கலக்கினார். அதாவது பிந்து கோஷ் உடல் பருமன் உடையவராக இருந்தாலும் அதை பெரிதும் பொருட்படுத்தாமல் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில் தான் இவர் கடந்த சில வருடங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்த வகையில் ஆளே அடையாளம் தெரியாமல் மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டார். அதாவது பிந்து கோஷ் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. பிரபல நகைச்சுவை நடிகை உயிரிழப்பு.... சோகத்தில் திரையுலகம்!அடுத்தது இரண்டு ஆண் மகன்கள் இவருக்கு இருக்கும் நிலையில் இளைய மகனின் ஆதரவில் தான் வாழ்ந்து வந்துள்ளார். அதே சமயம் சமீபகாலமாக மருத்துவ செலவிற்கு போதிய அளவில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த பிந்து கோஷ் தன்னுடைய 76வது வயதில் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் திரைப் பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ