பிரபல இயக்குனர் ஒருவர் அமரன் திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று (அக்டோபர் 31) அன்று வெளியான திரைப்படம் தான் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து ராகுல் போஸ் நடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்க உலகநாயகன் கமல்ஹாசனின் படத்தை தயாரித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். CH சாய் இதன் ஒளி பதிவு பணிகளை கவனித்துள்ளார். வீர மரணம் அடைந்த முகுந்து வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒரு பயோ பிக் படமாக உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் தங்களின் நடிப்பின் மூலம் படத்தை தாங்கி பிடித்துள்ளனர். அதற்கு இணையாக ஜி.வி. பிரகாஷின் இசையும் படம் வெற்றிப் பாதையில் நகர முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் அமரன் திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் கிட்டத்தட்ட 28 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் டிமான்ட்டி காலனி படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து, அமரன் திரைப்படத்தை பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
Loved everyyyy bit of #Amaran ❤️❤️ Such a soulful movie!! @Rajkumar_KP So so so happy for you 🤗🤗🤗 You deserve a hugeee success for your hardwork and persistence ❤️❤️ @Siva_Kartikeyan brother @Sai_Pallavi92 mind blowing performance 👏👏👏 @gvprakash bro such a soulful score ❤️…
— Ajay R Gnanamuthu (@AjayGnanamuthu) November 1, 2024
அந்த பதிவில், “அமரன் திரைப்படம் ஒரு ஆத்மார்த்தமான படம். ராஜ்குமார் பெரியசாமி உங்களின் கடின உழைப்பினாலும் விடாமுயற்சியாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். சிவகார்த்திகேயன் பிரதர் மற்றும் சாய் பல்லவி ஆகிய இருவரும் அற்புதமாக நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் ப்ரோ உங்கள் இசையால் ஸ்கோர் செய்திருக்கிறார். ஒட்டுமொத்த படக் குழுவுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.