spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநாகார்ஜுனா அதுக்கு ஓகே சொல்லிருக்க மாட்டாரு.... ஏதோ விஷயம் இருக்கு.... 'கூலி' குறித்து பிரபல தயாரிப்பாளர்!

நாகார்ஜுனா அதுக்கு ஓகே சொல்லிருக்க மாட்டாரு…. ஏதோ விஷயம் இருக்கு…. ‘கூலி’ குறித்து பிரபல தயாரிப்பாளர்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கூலி. இந்த படம் ரஜினியின் 171 வது படமாகும். இதனை கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார்.நாகார்ஜுனா அதுக்கு ஓகே சொல்லிருக்க மாட்டாரு.... ஏதோ விஷயம் இருக்கு.... 'கூலி' குறித்து பிரபல தயாரிப்பாளர்! சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர், உபேந்திரா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அதன்படி இப்படம் தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி ரூபாயை தட்டி தூக்கி விடும் என ரசிகர்கள் பலரும் நம்புகின்றனர். இதற்கிடையில் இந்த படம் 2025 ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகார்ஜுனா அதுக்கு ஓகே சொல்லிருக்க மாட்டாரு.... ஏதோ விஷயம் இருக்கு.... 'கூலி' குறித்து பிரபல தயாரிப்பாளர்!எனவே இப்படத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்தில் நடந்த பேட்டியில் கூலி படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “இந்த படம் லோகேஷ் கனகராஜின் எல்சியு இல்லை. இது ரஜினிக்காக எடுக்கப்பட்ட படம். ரஜினியின் வயதை குறைத்து, ரொமான்ஸ் பண்ற மாதிரி எடுக்கல. குடும்பம் சம்பந்தமாக பிரச்சனைகள் வரும்போது ஒரு மனிதர் என்ன செய்வார் என்பதை பற்றிதான் கூலி படம் இருக்கிறது. அதற்காக இது ஜெயிலர் படம் போல் இல்லை. லோகேஷ் கனகராஜ் இதில் பல விஷயங்கள் வைத்திருக்கிறார். நாகார்ஜுனா அதுக்கு ஓகே சொல்லிருக்க மாட்டாரு.... ஏதோ விஷயம் இருக்கு.... 'கூலி' குறித்து பிரபல தயாரிப்பாளர்!நாகார்ஜுனா, அமீர்கான் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லி இருக்க மாட்டாங்க. அவ்வளவு பெரிய ஹீரோக்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை. நாகார்ஜுனா ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பவர் அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொல்லி இருக்கவே மாட்டார். இருந்தாலும் இந்த படத்தில் அவர்கள் நடிக்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு மிகப்பெரிய விஷயம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ