Homeசெய்திகள்சினிமாகங்குவா படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.... நலமுடன் இருப்பதாக அறிவித்த சூர்யா!

கங்குவா படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து…. நலமுடன் இருப்பதாக அறிவித்த சூர்யா!

-

சிறுத்தை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றி பெற்றவர் சிறுத்தை சிவா. அதைத் தொடர்ந்து இவர் அஜித் நடிப்பில் உருவான வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என பல ஹிட் படங்களை கொடுத்தார். பின்னர் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்து அண்ணாத்த படத்தை இயக்கினார். அடுத்ததாக இவர் நடிகர் சூர்யாவை வைத்து கங்குவா திரைப்படத்தை எடுத்து வருகிறார். நிகழ்காலம் மற்றும் சரித்திர காலகட்டம் என இருவகையான பின்னணியில் உருவாகும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. கங்குவா படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.... நலமுடன் இருப்பதாக அறிவித்த சூர்யா!நீருக்கடியில் நடக்கும் சண்டை காட்சி, மரத்தின் கிளைகளில் நடக்கும் சண்டை காட்சி என வித்தியாசமான பல ரிஸ்க்கான சண்டை காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான ஒரு சண்டைக் காட்சி சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் போது கேமராவின் ரோப் அறுந்து விழுந்ததில் சூர்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்து பற்றிய செய்திகள் தீயாய் பரவ, சூர்யாவின் ரசிகர்கள் அவரின் உடல்நலம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சூர்யா விரைவில் குணமடைய வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

எனவே சூர்யா தன்னுடைய உடல் நலம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். என்னுடைய உடல் நலம் சற்று முன்னேறி உள்ளது என்றும் தங்களுடைய அளவு கடந்த அன்பிற்கு நன்றி என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்தச் செய்தி ரசிகர்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. கங்குவா படத்துக்காக நடிகர் சூர்யா தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து பணியாற்றி வருகிறார் என்று ஏற்கனவே படக்குழுவினர் சில பேட்டிகளில் கூறியிருந்தனர். கடினமான சண்டைக் காட்சிகளுடன் சூர்யா நடிப்பதால் படம் நிச்சயமாக ரசிகர்களை கவரும் ஆக்சன் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி போன்றோர் இப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் எதற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ