- Advertisement -
தமிழ் திரையுலகில் வில்லனாக பயணத்தை தொடங்கி பின் கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடத்திலும் கலக்கிய நடிகர் விஜயகுமார். சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு அருண்விஜய், கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீதேவி ஆகிய குழந்தைகள் உள்ளனர். கோலிவுட்டை கலக்கிய அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்துவிட்டார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தங்கம் தொடரில், ரம்யா கிருஷ்ணனுக்கு அப்பாவாக நடித்திருப்பார்.

இவரது மூத்த மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரும் விஜயகுமாரும் இணைந்து, பாண்டவர் பூமி , மலாய் மலாய் , மஞ்சா வேலு, குற்றம் 23 மற்றும் ஓ மை டாக் உள்பட பல படங்களில் நடித்திருக்கின்றனர். அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் முதன்முதலாக வில்லன் வேடத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் நடிகர் அருண் விஜயின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது




