Homeசெய்திகள்சினிமாலட்டு விவகாரத்தில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி!

லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி!

-

நடிகர் கார்த்தி லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கூறுவதாக தெரிவித்துள்ளார்.லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் சேர்க்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த தகவல் பக்தர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் மாநில அரசு இந்த விவகாரத்தை தீவிரப்படுத்தி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர்சிபி ஆட்சியில் தான் இது போன்ற முறைகேடுகள் நடந்திருப்பதாக தற்போதுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு ஒன்றினை முன் வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாகவே திருப்பதி தேவஸ்தானத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கண்டறிந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு ஒன்றையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு நியமித்திருந்தார். லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி!இதனால் தோஷம் உண்டாகி இருக்கக்கூடும் என்பதன் அடிப்படையில் லட்டு தயாரிக்கப்பட்ட இடத்திலும் விநியோகம் செய்த இடத்திலும் சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக தோஷம் நீங்கி கோவிலின் புனித தன்மை மீண்டும் வந்து விட்டதாக தலைமை அர்ச்சகர் கூறியிருந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் நடிகர் கார்த்தி மெய்யழகன் படத்தில் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது லட்டு விவகாரம் குறித்து நகைச்சுவையாக பேசியிருந்தார். அதாவது அந்த விழாவில் நடிகர் கார்த்தியிடம் சில மீம்ஸ்கள் போட்டுக் காட்டப்பட்ட நிலையில் அதில் ஒரு மீமில் ‘எனக்கு லட்டு வேண்டும்’ என்று இருப்பதாக நெறியாளர் வாசித்தார். அதற்கு கார்த்தி, “லட்டு விவகாரம் மிகவும் உணர்ச்சிகரமானது. அதைப் பற்றி பேச வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார். இதில் நடிகர் கார்த்தி தவறாக எதுவும் பேசவில்லை என்றாலும், இந்த கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது என்று பவன் கல்யாண் நடிகர் கார்த்திக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். “நான் உங்களை நடிகன் என்பதன் அடிப்படையில் மதிக்கிறேன் ஆனால் நீங்கள் சனாதன தர்மம் என்று வரும்போது ஒரு வார்த்தை பேசுவதற்கு முன் 100 முறை யோசிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து நடிகர் கார்த்தி தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில், “பவன் கல்யாண், உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். எதிர்பாராத தவறான புரிதல்களுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏழுமலையானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில் நான் எப்போதும் நம் மரபுடன் நடக்கிறேன்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

MUST READ