கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி பொங்கல் தின ஸ்பெஷலாக உலகம் முழுவதும் வெளியான திரைப்படங்களில் ஹனுமான் திரைப்படமும் ஒன்று. இந்த படத்தினை பிரசாந்த் வர்மா இயக்கியிருந்தார். தேஜா சஜ்ஜா ஹீரோவாக நடித்திருந்தார். தெலுங்கு மொழியில் உருவாகியிருந்த இந்த படம் பான் இந்திய அளவில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் அட்டகாசமான பி எஃப் எக்ஸ் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து படமானது குறுகிய நாட்களில் அதிக வசூலை வாரிக் குவிக்க காரணமாக அமைந்தது. இந்நிலையில் நடிகர் கார்த்தி, பிரசாந்த் வர்மா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது மெய்யழகன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கியிருக்கும் இந்த படமானது வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். எமோஷனல் கலந்த குடும்பப் பொழுதுபோக்கு கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
#Meiyazhagan Telugu Pre-release Event Actor #Karthi New Lineups
– #PrasanthVarma, who directed #HanuMan, is next telling the story of big heroes and recently he told a story to actor Karthi.
– The film will be a mass action film#Kaithi2 #Sardar2 #PVCUpic.twitter.com/KEfZNsjpSv— Movie Tamil (@MovieTamil4) September 24, 2024
இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி, பிரசாந்த் வர்மாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான அப்டேட்டை கொடுத்துள்ளார். மேலும் இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படமானது மாஸான ஆக்சன் படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.