Homeசெய்திகள்சினிமாமலையாள இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் நானி.... வெளியான புதிய தகவல்!

மலையாள இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் நானி…. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி தமிழில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். மலையாள இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் நானி.... வெளியான புதிய தகவல்!அந்த வகையில் தமிழில் இவரது நடிப்பில் வெளியான வெப்பம், நான் ஈ போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவரது நடிப்பில் கடைசியாக ஹாய் நான்னா எனும் திரைப்படம் வெளியானது. நல்ல ஒரு பீல் குட் படமாக வெளியாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நானி நடிப்பில் சூர்யாவின் சனிக்கிழமை எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. மலையாள இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் நானி.... வெளியான புதிய தகவல்!இந்த படம் தெலுங்கில் சரிபோதா சனிவாரம் என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் நிலையில் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வருகின்ற ஆகஸ்டு 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து நானி தசரா படத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தனது 33வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நானியின் அடுத்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இயக்கப் போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.மலையாள இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் நானி.... வெளியான புதிய தகவல்! அதன்படி த்ரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் அல்லது மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் இயக்குனர் சிதம்பரம் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் நானியின் அடுத்த படத்தை இயக்குவார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ