spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் பிரகாஷ்ராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்!

நடிகர் பிரகாஷ்ராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்!

-

- Advertisement -

பிரபல நடிகராக வலம் வரும் பிரகாஷ்ராஜ் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பல மொழி படங்களிலும் நடித்து அசால்ட் செய்பவர். நடிகர் பிரகாஷ்ராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்! அந்த வகையில் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலுமே தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே பொருந்திப் போய் ஏராளமான ரசிகர்களின் மனதை வென்று முழுமையான கலைஞனாக மாறி இருக்கிறார். நாடகப் பின்னணியில் இருந்து சினிமா துறைக்கு வந்து சாதித்துக் காட்டியவர்களில் முக்கியமானவர்தான் பிரகாஷ்ராஜ். கன்னட மொழியை தாய்மொழியாக கொண்ட இவர் ஆரம்பத்தில் கன்னட தொடர்களில் நடித்து வந்தார்.நடிகர் பிரகாஷ்ராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்! பின்னர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் டூயட் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். பாலச்சந்தர் அறிமுகப்படுத்தியவர்களில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்திருப்பவர்களின் பட்டியலில் பிரகாஷ் ராஜ் ஒருவர். நடிகர் பிரகாஷ்ராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்!அதன்படி 90களுக்கு பின்னர் பழமொழிகளில் நேர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும் சரி எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும் சரி இரண்டிலுமே தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டுபவர். தன் தாய்மொழி கன்னட மொழியாக இருந்தாலும் தமிழ் படங்களில் எவ்வளவு கடினமான வசனங்களாக இருந்தாலும் அதை ஒரு சவாலாக கருதி ஜெயித்துக் காட்டி ஆச்சரியப்பட வைப்பார். அஜித்தின் ஆசை படத்தில் வில்லனாக ஒரு பக்கம் அப்பு படத்தில் திருநங்கையாக மறுபக்கம் என வெவ்வேறு பரிமாணங்களில் நடிக்கும் துணிச்சல் உடையவர். குறிப்பாக கமல்ஹாசனின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் பிரகாஷ்ராஜின் கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. நடிகர் பிரகாஷ்ராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்!இவ்வாறு தனது தனித்திறமையை அடையாளமாக மாற்றி தனக்கான முத்திரை பதித்த இவர் தற்போது வரை இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி, உள்ளிட்ட மொழி படங்களில் பல விருதுகளை வென்ற பெருமைக்குரிய பிரகாஷ்ராஜ் இன்று தனது 59ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் நாமும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வோம்.

MUST READ