Homeசெய்திகள்சினிமாவிவசாயியாக மாறிய நடிகர் சசிகுமார்!

விவசாயியாக மாறிய நடிகர் சசிகுமார்!

-

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் சசிகுமார் சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். விவசாயியாக மாறிய நடிகர் சசிகுமார்!அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய ஈசன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே நடிப்பதில் ஆர்வம் உடைய இவர் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ஃப்ரீடம், எவிடென்ஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இருப்பினும் சசிகுமார் சோலோவாக நடித்த படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் கடந்த மே மாதம் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார் சசிகுமார். கருடன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சசிகுமாருக்கு பல பட வாய்ப்புகள் தேடி வருகின்றன.

அதே சமயம் வெப் தொடர் ஒன்றையும் சசிகுமார் இயக்கப் போவதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் சசிகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில், “எங்க வயலில் நடவு, வயலும் வாழ்வும்” என்று பதிவு ஒன்றினை வெளியிட்டு வயலில் நடவு நடும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ