நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் பிரபலமான சூரி தற்போது அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே விடுதலை, கருடன் ஆகிய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் சூரி. இது தவிர மண்டாடி எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமில்லை. அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று. இந்த உரை என் திரைப்படத்திற்காக மட்டுமல்ல. ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை, அக்கறை ஆகியவை இருக்கின்றன. ஒரு படம் உருவாகிறது என்றால் அது ஒரு குழந்தை பிறப்பதை போல். கதையிலிருந்து தொடங்கி, படப்பிடிப்பு, பின்னணி வேலை, தொகுப்பு, இசை விளம்பரங்கள் என ஒவ்வொரு கட்டமும் உணர்வுகள் கலந்த மாறாத உறுதியுடன் கட்டி எழுப்பப்படுகிறது. ஒரு படம் வென்றாலும், தோற்றாலும், அது ஒரு பயணம். அந்த பயணத்தில் வலிகள், மகிழ்ச்சிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கலந்துள்ளது. இவ்வளவு முயற்சிக்குப் பிறகு சிலர் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு, அதை பெருமையாக பகிரும்போது அது நம் உள்ளத்தை சிதைக்கிறது. அந்த ஒரு வியூக்காக யாரோ ஒருவரின் வருடங்கள் கொண்ட உழைப்பை கலைத்து விடுகிறோம். திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டும் இல்லை.
ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல… அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று.
இந்த உரை என் திரைப்படத்துக்காக மட்டும் அல்ல. ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை, மற்றும் அக்கறை இருக்கின்றன.
ஒரு…
— Actor Soori (@sooriofficial) May 23, 2025

சில நேரங்களில் சமூகத்தில் முக்கியமான கருத்துக்களை எடுத்துரைக்கும் வழிமுறையாகவும் உருவாகின்றன. சில படம் யாரோ ஒருவரின் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. இத்தனை தன்னலம் இல்லாத உழைப்பை மதிக்காமல், திருட்டுப் பதிவிறக்கம் செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல. மனித நேயத்தையும் கைவிடும் செயல். எனவே என் பணிவான வேண்டுகோள், திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள். திரைப்படங்களை சரியான வழியில் பார்த்து, அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள். உங்கள் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது. நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால் திரையுலகம் இன்னும் உயரலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.