தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சூரி. அதைத்தொடர்ந்து இவர் தனது கடின உழைப்பினால் ஹீரோவாக உருவெடுத்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான விடுதலை, கருடன் ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தது இவர் மண்டாடி எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இன்று (மே 16) சூரியின் நடிப்பில் உருவாகியிருந்த மாமன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இதனை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். இதில் சூரியுடன் இணைந்து ராஜ்கிரண், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சுவாசிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். தாய்மாமனுக்கும், மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து எமோஷனல் ஃபேமிலி என்டர்டெய்னர் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக சூரியின் ரசிகர்கள் சிலர், கோயிலில் வேண்டிக்கொண்டு மண் சோறு சாப்பிட்டுள்ளனர். இந்த தகவல் அறிந்த சூரி, “மாமன் படத்தின் வெற்றிக்காக மதுரையில் மண் சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என்று சொல்வதற்கு கேவலமாக இருக்கிறது. தம்பிகளா! இது மிகவும் முட்டாள்தனமானது. படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் படம் நல்லா ஓடும். அதை விட்டுவிட்டு மண் சோறு சாப்பிட்டால் படம் ஓடிவிடுமா? இதற்காக நீங்கள் செலவு செய்த பணத்தில் 4 பேருக்கு உணவு, தண்ணீர் வாங்கி கொடுத்திருக்கலாம். இது போன்ற செயலை செய்பவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருப்பதற்கு கூட தகுதியற்றவர்கள்” என்று கோபமாக திட்டி தீர்த்துள்ளார் .
- Advertisement -


