Homeசெய்திகள்சினிமாநடிகர் சூரியின் புதிய அவதாரம்.... லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் சூரியின் புதிய அவதாரம்…. லேட்டஸ்ட் அப்டேட்!

-

நடிகர் சூரி ஆரம்பத்தில் காமெடி நடிகராக நடித்தவர். அந்த வகையில் சுசீந்திரன், விஷ்ணு விஷால் கூட்டணியின் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். நடிகர் சூரியின் புதிய அவதாரம்.... லேட்டஸ்ட் அப்டேட்!இந்த படத்தில் இருந்து நடிகர் சூரி, பரோட்டா சூரி என்றுதான் பலராலும் அழைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார் சூரி. அடுத்ததாக கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் இவர் ஹீரோவாக கலந்தரங்க அடுத்ததாக கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் இவர் ஹீரோவாக களமிறங்க அந்த படம் மிகப்பெரிய வெற்றி கண்டது. இதுவரை சூரியை காமெடி கதாபாத்திரத்தில் பார்த்தவர்கள் விடுதலை படத்தில் மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில் பார்க்க முடிந்தது. அதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான கருடன் திரைப்படத்தில் நடிகர் சூரி ஆக்சன் ஹீரோவாக நடித்து பெயர் பெற்றார். நடிகர் சூரியின் புதிய அவதாரம்.... லேட்டஸ்ட் அப்டேட்!இவ்வாறு தொடர்ந்து பல படங்களை ஹீரோவாக நடித்து வரும் சூரி தற்போது கொட்டுக்காளி எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 23 அன்று திரைக்கு வர இருக்கிறது. இவ்வாறு காமெடியன், ஹீரோ என அடுத்தடுத்த அவதாரங்கள் எடுக்கும் சூரி குறித்த புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது நடிகர் சூரி மதுரையை பின்னணியாக கொண்ட கதை ஒன்றை எழுதி இருக்கிறாராம். அதனை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கதையை இயக்குனர் பிரசாந்த் முருகேசன் இயக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ