spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'டூரிஸ்ட் ஃபேமிலி' படக்குழுவினரை பாராட்டிய சூர்யா..... இயக்குனர் வெளியிட்ட நெகழ்ச்சி பதிவு!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவினரை பாராட்டிய சூர்யா….. இயக்குனர் வெளியிட்ட நெகழ்ச்சி பதிவு!

-

- Advertisement -

நடிகர் சூர்யா, டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.'டூரிஸ்ட் ஃபேமிலி' படக்குழுவினரை பாராட்டிய சூர்யா..... இயக்குனர் வெளியிட்ட நெகழ்ச்சி பதிவு!

கடந்த மே 1ஆம் தேதி அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி நடைபோட்டு வருகிறது. அதேசமயம் திரைப்பிரபலங்கள் பலரும் இந்த படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே ரஜினி, சிவகார்த்திகேயன் ஆகியோர் இந்த படத்தை பாராட்டியுள்ள நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக இப்படத்தின் இயக்குனர் அபிஷன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. ஆனால் எனக்குள் இருந்த ஏதோ ஒன்று இன்று குணமடைந்துவிட்டது. சூர்யா சார் என் பெயரை அழைத்து டூரிஸ்ட் ஃபேமிலி படம் எவ்வளவு பிடிக்கும் என்று கூறினார். என்னுள் இருக்கும் ஒரு பையன் இன்னும் 100வது முறையாக வாரணம் ஆயிரம் படத்தை பார்க்கிறேன். இன்று அந்த பையன் நன்றியுடன் அழுகிறான். நன்றி சார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ