spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய பிரபல நடிகை... வெளியேற முடியாமல் தவிப்பு...

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய பிரபல நடிகை… வெளியேற முடியாமல் தவிப்பு…

-

- Advertisement -
மலையாளத்தில் வெளியாகி ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் அதிரி புதிரி ஹிட் அடித்த திரைப்படம் பிரேமலு. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது. முதலில் வெளியான மொழி மலையாளமாக இருந்தாலும், படம் ஹிட் அடிக்கவே, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிரேமலு திரைப்படம் டப்பிங் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் மமிதா பைஜூ. இவர் இப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்.

 

we-r-hiring
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இவர் கவனம் ஈர்த்துள்ளார். தமிழில் ஜிவி பிரகாஷ் நடித்த ரெபல் படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு மலையாளம் மட்டுமன்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் லைகா நிறுவனத்தில் தயாரிப்பில் அதர்வா நடிக்கும் புதிய படத்தில் மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.

https://x.com/i/status/1797219242011402255

இந்நிலையில் சென்னையில் கடை திறப்பு விழா ஒன்றில் நடிகை மமிதா பைஜூ கலந்து கொண்டார். பைஜூவைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்த மமிதாவை ரசிகர்கள் தள்ளியதால் நடக்க கூட முடியாமல் தடுமாறினார். இதையடுத்து, பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகிறது.

MUST READ