எம். குமரன் S/O மகாலட்சுமி படம் குறித்து நடிகை நதியா பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
திரைத் துறையில் மலையாள சினிமாவின் மூலம் காலடி எடுத்து வைத்தவர் நடிகை நதியா. அந்த வகையில் இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மொழியிலும் நடித்து பெயர் பெற்றவர். அந்த வகையில் இவர் சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் வெளியான எம். குமரன் S/O மகாலட்சுமி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதாவது ரவி மோகனுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தான் இந்த படம் கிட்டதட்ட 20 வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே இது தொடர்பாக நடிகை நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram

அந்த பதிவில், ” என் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக விளங்கிய படம் எம். குமரன் S/O மகாலட்சுமி 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. எல்லா வயதினரையும் கவர்ந்த மறக்க முடியாத படத்தின் ஒரு பகுதியாக இருந்தது உண்மையிலேயே ஒரு இனிமையான அனுபவம். மோகன் ராஜா, ரவி மோகன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிட்டு ரவி மோகன், மோகன் ராஜா ஆகியோருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் நதியா.