நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை சமந்தா பல தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனனின் தெலுங்கு திரைப்படமான “யா மாயா சேஸ்வா” என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் பாணா காத்தாடி, நீதானெ என் பொன் வசந்தம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னானி கதாநாயகியாக வளம் வந்துள்ளார்.

நடிகை சமந்தா தனது புகைப்படங்களை கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் வெளியிடவில்லை. இதற்கான காரணம் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா அதில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு பிரபலங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று ஆறுதல் கூறி வந்தனர். தற்போது நடிகை சமந்தா நடிப்பில் வெளிவந்த யாசதோ திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கொடுக்கப்பட்ட பேட்டியிலும் அந்த நோய் குறித்து பேசுகையில் கண்ணீர் விட்டு அழுதார். மேலும் அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.
இந்நிலையில் உடல் நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதியா? அல்லது வேறு ஏதும் காரணங்களால் அனுமதிக்கப்பட்டுள்ளாரா? என்ற விவரம் முழுமையாக வெளியாக வில்லை.