நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையில் ஒரு அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆகையினால் தனது தளபதி 69 திரைப்படத்திற்கு பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார் விஜய். இதற்கிடையில் கட்சிக்கொடி அறிமுகப்படுத்துவது, மாநாடு என அரசியல் தொடர்பான வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அதன்படி நாளை (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் விஜயின் த.வெ.க கட்சியின் முதல் மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நாளை இம்மாநாடு நடைபெற இருக்கிறது. மேலும் விஜய், மாநாட்டு திடலுக்கு இன்று இரவே வருகை தர இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. விஐபிகள் தங்குவதற்காக அங்கு ரூம் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் விஜயின் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிரபலங்கள் குறித்த தகவல்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், பிரபல வக்கீல் கே எஸ் ராதாகிருஷ்ணன், நாஞ்சில் சம்பத், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் ஏ ஆர் முருகதாஸ், பிரேம்ஜி, வெங்கட் பிரபு, சஞ்சீவ், ஸ்ரீமன் ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் நடிகை ஷாலினியும் விஜயின் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் போகிறார் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. மேலும் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.