- Advertisement -
தோழியின் வீட்டில் கிலோ கணக்கில் நகை திருடிய பிரபல நடிகையும், இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சருமான சௌமியா ஷெட்டி கைது செய்யப்பட்டார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரும் தினசரி புகைப்படங்களையும், ரிலீஸையும் பதிவிட்டு பிரபலம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் தினமும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் போட்டு இணையத்தில் பிரபலம் ஆனவர் சௌமியா ஷெட்டி. மேலும், தெலுங்கில் டிரிப் என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். இவர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திருட்டு வழக்கில் சிக்கியிருக்கிறார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


விசாகப்பட்டினத்தில் பாலாஜி மெட்ரோ ரெசிடென்சியில் ஜனபால் பிரசாத்பாபு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் கடந்த மாதம் ஒரு கிலோ தங்க நகைகள் திருட்டு போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை அடுத்துபோலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அவர்களின் குடியிருப்பு பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். மேலும், குடும்பத்தினர் மத்தியில் விசாரிக்கையில் சந்தேகப்படும்படியாக 3 பேரை கூறினர்.



