Homeசெய்திகள்சினிமாபவன் கல்யாணுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து

பவன் கல்யாணுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து

-

- Advertisement -
ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும், பவன் கல்யானின் ஜனசேனா கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு செய்தது

நடந்து முடிந்த ஆந்திர மாநில தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 21 இடங்களிலும், நாடாளுமன்றத்திற்காக போட்டியிட்ட 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. நடிகர் பவன் கல்யாண் பித்தாபுரம் தொகுதியில் போட்டியிட்டு, சுமார் ஒரு லட்சத்து, 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்ச்சி போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் கட்சி வேட்பாளரை வென்றார்.

https://x.com/i/status/1797987460137549943

கட்சி தொடங்கி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையொட்டி பவன் கல்யாணுக்கு தெலுங்கு சினிமா பிரபலங்களும், தமிழ் சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இணையத்தில் அவரது மீம்கள் தெறிக்கவிடப்படுகின்றன.

MUST READ