ஜெயிலர் படம் 10 மடங்கு நன்றாக வந்துள்ளது- படத்தைப் பார்த்து ரஜினி கூறியதாக இயக்குனர் நெல்சன் பேச்சு
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் சென்னை பிரசாத் லேப்பில் நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள் சுனில், வசந்த் ரவி, நடிகை மிருணா, ஜாஃபர் இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.
இயக்குனர் நெல்சன் மேடையில் பேசுகையில்,
இவ்ளோ பெரிய ஹிட் ஆக வேண்டும் என படம் எடுக்கவில்லை, நல்ல படம் எடுக்க வேண்டும் என்றுதான் படத்தை உருவாக்கினோம். இந்த கதையும் அதில் ரஜினி சார் நடித்ததும் தான் இந்த வெற்றிக்கு காரணம் அதோடு ரஜினி சாரின் ரசிகர்கள் கொண்டாடியது தான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இந்த படத்தில் அதிகம் பணியாற்றியது எடிட்டர் நிர்மல் தான் படம் வெளியான நாளன்று வரை பணியாற்றினார். அதேபோல ஒளிப்பதிவு, ஆடை, ஸ்டண்ட் என அனைவரும் அவர்களது பணியை சரியாக நேர்த்தியாக செய்தனர். படத்திற்கான பட்ஜெட் ஆரம்பத்தில் இருந்ததை விட படம் நடக்க நடக்க அதிகமானது அந்த ப்ரஷரை படக் குழுவினர் மீது காண்பிக்காமல் சன் பிக்சர்ஸ் கண்ணன் செம்பியன் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
படம் வெளியாவதற்கு மூன்று நாள் முன்பு ரஜினி சார் படத்தை பார்த்து பாராட்டினார். அப்போது நான் கேட்டேன் நீங்கள் எதிர்பார்த்ததுபோல் வந்துள்ளதா என்று அதற்கு அவர், நான் நினைத்ததை விட 10 மடங்கு அதிகமாக வந்துள்ளது. படம் நன்றாக வரும் என எனக்கு தெரியும் ஆனால் இந்த அளவிற்கு வரும் என எதிர்பார்க்க வில்லை என பாராட்டினார் என்றார்.
தற்போது ரஜினி சார் இமயமலை சென்றுள்ளார் அவர் சென்னை திரும்பியதும் நேரில் சென்று பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்றார்.
நடிகர் வசந்த் ரவி மேடையில் பேசுகையில்,
அனிருத் இசையில் எப்படியாவது பணியாற்றிட வேண்டும் என ஆசைப்பட்டேன் அந்த வகையில் ரத்தமாரே பாடலை அமைந்துள்ளது அவரும் அற்புதமாக அந்த பாடலை கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு நடிகருக்கும் ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்பது கனவு எனக்கு அந்த கனவு நிறைவேறி உள்ளது. தரமணி,ராக்கி அந்த வரிசையில் ஜெயிலர் மறக்க முடியாத திரைப்படம். என் திரை வாழ்க்கையில் இது ஒரு மைல்ஸ்டோன்.
ஜெயிலர் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு நாளும் அவரிடம் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் எண்ணுவேன். ரஜினி சார் எனக்கு அப்பா மாதிரி ரஜினி அப்பா.
ஜெயிலர் படம் முடியும் பொழுது உங்களை மிஸ் செய்வேன் சார் என ரஜினி சாரிடம் சென்று கூறினேன் மீண்டும் உங்களோடு ஒரு படம் நடிக்க வேண்டும் எனவும் கூறினேன். அவரும் கண்டிப்பாக நானும் மிஸ் பண்றேன் என்றார் கட்டாயம் மீண்டும் சேர்ந்து படம் பண்ணலாம் என கூறியதாக கூறினார். என்னுடைய வாழ்க்கையில் எப்பவும் ஜெயிலர் திரைப்படம் முக்கிய பங்கு வகிக்கும்.
ஸ்டண்ட் சிவா மேடைப்பேச்சு,
கோலமாவு கோகிலா படம் பார்த்து பிறகு கண்டிப்பாக இந்த இயக்குனருடன் படம் பண்ண வேண்டும் என முடிவு செய்து தொடர்ந்து அவரிடம் வாய்ப்பு கேட்டுக்கொண்டே இருந்தேன். அதனை தொடர்ந்து ரஜினி சார் படம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரஜினி சாருடன் என்னுடைய முதல் படம் ஜெயிலர். ஒளிப்பதிவு, எடிட்டிங்,இயக்கம் என அனைவரும் ரசித்து ரசித்து படத்தை உருவாக்கினோம்.