Homeசெய்திகள்சினிமாவின்டேஜ் லுக்கில் ரஜினி... ஏஐ உலகில் அசத்தல் புகைப்படங்கள்...

வின்டேஜ் லுக்கில் ரஜினி… ஏஐ உலகில் அசத்தல் புகைப்படங்கள்…

-

- Advertisement -

ஏஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வௌியாகி, டிரெண்டாகி வருகின்றன.

ரஜினி தனது ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்க உள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் தயாராக உள்ளது.

படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியார் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

வின்டேஜ் லுக்கில் ரஜினி... ஏஐ உலகில் அசத்தல் புகைப்படங்கள்...

இந்நிலையில், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட ரஜினிகாந்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வின்டேஜ் லுக்கில் இருக்கும் ரஜினியின் புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.

MUST READ