ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள நேசிப்பாயா படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் தான் ஆகாஷ் முரளி. இவர் தற்போது நேசிப்பாயா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். இந்த படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து பிரபு, குஷ்பூ, சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தை அஜித்தின் பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான விஷ்ணுவரதன் இயக்கியுள்ளார். எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார். கேமரான் எரிக் பிரிசன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தினத்தன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தன. அடுத்ததாக இந்த படத்தின் டிரைலரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் ஆகாஷ் முரளி – அதிதி சங்கர் ஆகிய இருவருக்குமான காதல், பிரேக் அப் போன்றவை காட்டப்படுகின்றன. அதேசமயம் எமோஷனலான காட்சிகளும் காட்டப்படுகின்றன. இந்த ட்ரெய்லர் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.


