அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் நேற்று (டிசம்பர் 5) உலகம் முழுவதும் வெளியான படம் தான் புஷ்பா 2. சுகுமார் இயக்கியிருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரையிடப்பட்டது. இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். சாம்.சி.ஸ் பின்னணி இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி இந்த படம் முதலில் மட்டும் உலக அளவில் கிட்டத்தட்ட 270 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் இப்படம் ரூ 8 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படம் முழுவதையும் தனது தோளில் தாங்கி பிடித்துள்ளார். அத்துடன் ஆக்ஷன் காட்சிகளிலும் தெறிக்கவிட்டுள்ளார் அல்லு அர்ஜுன். அதேபோல் நடிகர் பகத் பாசில் தனது வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். இப்படத்தின் பின்னணி இசையும் மிரட்டலாக அமைந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. எனவே புஷ்பா படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியதை போல் இரண்டாம் பாகமும் இனிவரும் நாட்களில் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.