spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2'.... இரண்டாவது பாடல் வெளியீடு!

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா 2’…. இரண்டாவது பாடல் வெளியீடு!

-

- Advertisement -

அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2'.... இரண்டாவது பாடல் வெளியீடு!அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா தி ரைஸ். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். செம்மரக்கட்டை கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியாகியிருந்த இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அடித்து நொறுக்கியது. அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2'.... இரண்டாவது பாடல் வெளியீடு!அதேசமயம் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. மேலும் அல்லு அர்ஜுன் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார். எனவே படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. புஷ்பா 2 – தி ரூல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி படம் தொடர்பாக வெளிவரும் அனைத்து அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் ‘புஷ்பா புஷ்பா’ எனும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

we-r-hiring

அதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா இருவருக்குமான ‘சூடான’ எனும் பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் புஷ்பா 2 படமானது 2024 ஆகஸ்ட் 15 அன்று வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ