spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநான் பிறந்த மண்ணுக்கு நன்றி .... அல்லு அர்ஜுன் வெளியிட்ட பதிவு!

நான் பிறந்த மண்ணுக்கு நன்றி …. அல்லு அர்ஜுன் வெளியிட்ட பதிவு!

-

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இருப்பினும் இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது நடிப்பில் தற்போது புஷ்பா 2 எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தினை சுகுமார் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தினை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. நான் பிறந்த மண்ணுக்கு நன்றி .... அல்லு அர்ஜுன் வெளியிட்ட பதிவு!தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து பகத் பாஸில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் இந்திய அளவில் பிரபலமான நிலையில் புஷ்பா 2 தி ரூல் என்ற தலைப்பில் உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி இந்த படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் படத்தின் டீசர், ட்ரெய்லர், அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி சென்னையில் புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜுன், “புஷ்பா படத்திற்காக வெளிநாடுகளுக்கு நான் சென்றிருந்தாலும் சென்னை வரும் போது அந்த உணர்வு வேறு மாதிரியாக இருக்கிறது.

ஏனென்றால் என்னுடைய முதல் 20 வருட வாழ்க்கையை நான் சென்னையில் தான் வாழ்ந்தேன். எனவே நான் எவ்வளவு சாதித்தாலும் அதை என்னுடைய தமிழ் மண்ணுக்கு தான் சமர்ப்பிப்பேன்” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் தனது சமூக வலைதள பக்கத்தில், “நான் பிறந்த இந்த மண்ணுக்கு என் அன்பார்ந்த நன்றி” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

MUST READ