நடிகர் ஆனந்தராஜ், வா வாத்தியார் படம் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் ஆனந்தராஜ். இவர், கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ‘சூது கவ்வும்’ படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து கிரித்தி ஷெட்டி, ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யராஜ் இதில் வில்லனாக நடித்திருக்கிறார்.
இந்த படமானது வருகின்ற டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. அதன்படி ஏற்கனவே படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆனந்தராஜ் சமீபத்தில் ‘மதறாசி மாஃபியா கம்பெனி’ பட நிகழ்ச்சியின் போது ‘வா வாத்தியார்’ படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “வா வாத்தியார் படத்தில் நடித்திருக்கிறேன்.
#Anandaraj about #VaaVaathiyaar
– #Karthi sir, #Sathyaraj sir, #Rajkiran sir, and I acted in VaaVaathiyaar movie.
– The movie begins with #MGR’s death, and at that moment, Karthi sir’s character is born.#Kaithi2pic.twitter.com/LsWbPw6NTi— Movie Tamil (@_MovieTamil) November 1, 2025

அந்த படத்தில் கார்த்தி சார், சத்யராஜ் சார், ராஜ்கிரண் சார் எல்லாரும் அந்த படத்தில் இருக்கிறோம். எம்.ஜி.ஆர் அவர்கள் தவறியபோது பிறப்பவர்தான் கார்த்தி சார். இந்த படத்தின் கதை அப்படித்தான் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


